Please Wait...

Intermittent Positive Pressure Breathing Ventilator(IPPV).

Intermittent Positive Pressure Breathing Ventilator(IPPV).

Dear Alumni, உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கும் மேலும் குணமாக்குவதற்கும் ஐ.சி.யூ ஆக்ஸிஜன் வென்டிலேட்டர்களின் தேவை 500 சதவீதத்தில் இருந்து 1000 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த அசாதாரண சூழ்நிலையை சமாளிப்பதற்காக இரத்தினம் கல்லூரியின் மாணவர்களான திரு. கார்த்திக் எஸ், திரு. கெளதம் சாந்தகுமார் உடன் பயோ மெடிக்கல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையின் ஆதரவுடன் மாணவர் தொடக்க நிறுவனங்கள் இந்த தயாரிப்பை உருவாக்கியுள்ளது. ரத்தினம் கல்லூரியின் மாணவர் தொடக்க நிறுவனங்களான ஜெ கே டேட்டா சிஸ்டம்ஸ் (JK Data Systems) மற்றும் AIC Raise, Supported by Atal Innovation Mission, NITI Aayog உடன் இணைந்து முன்மாதிரி வென்டிலேட்டர்களை வடிவமைத்துள்ளனர் மேலும் இந்த வென்டிலேட்டர்கள் அணைத்து விதமான மின்னணு அம்சங்களுகுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதன் மதிப்பு ரூபாய் 25.000/- க்கும் குறைவாக இருப்பது இதன் சிறப்பு அம்சமாகும். இது இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பெரும் தேவையை தீர்க்கும் திறனைக் கொண்டுள்ளது. இந்த வென்டிலேட்டர் ஒரு சர்வதேச திறந்த மூல வென்டிலேட்டர் திட்டத்தின் மறு வடிவமைப்பால் தயாரிக்கப்படுகிறது. மாணவர்கள் இந்த திட்டத்தை மார்ச் 22 இல் தொடங்கி 4 நாட்களில் முன்மாதிரியை வடிவமைத்தனர். Intermittent Positive Pressure Breathing ventilator (IPPV) இந்த வென்டிலேட்டர் இப்போது சோதனைக்கு தயாராக உள்ளது, மேலும் சோதனைக்கு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையிடம் அனுமதி பெற்றுள்ளது. இந்த சாதனம் நுரையீரலின் அலை அளவைக் கண்காணித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல், ரத்த அழுத்தம், ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் கண்காணிப்பு அமைப்புகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாதனம் அதன் செயல்பாடுகளை கட்டுப்படுத்த உகந்த வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளதால், இந்த வென்டிலேட்டர் நம் நாட்டில் பல நோயாளிகளுக்கு உதவும் என்று மாணவர்கள் குழு நம்புகிறது. இந்த வென்டிலேட்டர் சோதனைக்குப் பிறகு, அரசாங்கத்திடம் உற்பத்தி செய்ய உரிய உரிமம் பெறுவதற்கு முடிவுசெய்துள்ளது. மாணவர்களின் இந்த புதிய முயற்சிக்கும் மற்றும் கடின உழைப்பிற்கும் கல்லூரி நிர்வாகம் பாராட்ட கடமைப்பட்டுள்ளது.

Share on: